October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சர்வர் சுந்தரம் டீமுக்கு சந்தானம் கொடுத்த ஊமைக்குத்து
January 22, 2020

சர்வர் சுந்தரம் டீமுக்கு சந்தானம் கொடுத்த ஊமைக்குத்து

By 0 876 Views

காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவ்ர் சந்தானம். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க, 2016-ஆம் ஆண்டே தயாராகி மூன்று வருடங்களுக்குப் பின்னர் வரும் வெள்ளியன்று வெளி வர போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம்.

Server Sundaram Team

Server Sundaram Team

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து ’. கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற திரைப்படங்களில் நடித்த வைபவி நடித்துள்ளார்.

மேலும் கிரண், மாயா கிருஷ்ணன், ராதாரவி உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடிச்சிருக்கும் இந்த சர்வர் சுந்தரத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரெண்டு வருஷங்களுக்கு முன்னாலேயே வெளியாகி விட்டது

அதன் பின் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை. இந்தநிலையில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதற்கான வேலைகளில் மேற்படி டீம் ஈடுப்பட்டிருந்த நிலையில் அதே ஜனவரி 31-ஆம் தேதி, சந்தானம் நடித்த ‘டகால்டி’ திரைப்படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..

இதில் இந்த டகால்டி படத்தை ’18 ரீல்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருக்கிறார்.

இதற்கிடையில் சர்வர் சுந்தரம் பட டீம், சந்தானத்தின் பிறந்த நாளையொட்டியும், தங்கள் பட புரொமோஷனுக்காகவும் வேளச்சேரியில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்கள்..

ஆனால், அங்கு வராமல் மிஸ் ஆனார் சந்தானம்… பேனரெல்லாம் ரெடி பண்ணி காத்திருந்த புரொடியூசர் ரொம்ப நொந்துட்டார்.

ஏற்பாடெல்லாம் சரி… சந்தானத்தைக் கூப்பிட்டாங்களா தெரியலை..!

ஆனா ஏதோ ஊமைக்குத்து இருக்கு..!