August 31, 2025
  • August 31, 2025
Breaking News
July 2, 2020

ஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்

By 0 1716 Views

மலையாளத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக இயக்கியிருக்கிறார் சுஜிஷ். இந்த குறும்படத்திற்கு ஷகிலா என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

ஷகிலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற திரைப்படம் கோட்டபுரம் அக்ஷரா திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் முதல் ஷோவில் ஷகிலா தியேட்டரில் ரசிகர்கள் முன்பாக வருகிறார்.

இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மலையாள நடிகை சரயூ மோகன் ஷகிலா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரணமில்லை, சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

ராஜாவுக்கு செக் படத்தில் சேரனுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். ஷகிலா குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியாகிறது.

ஏற்கனவே ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு முழுநீளத் திரைப்படமாக தமிழ், கன்னடம் ,மலையாளம் தெலுங்கு ,மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது.