April 24, 2024
  • April 24, 2024
Breaking News
December 2, 2022

HITS நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம்

By 0 295 Views
  • ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS) நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் தொடங்கப்பட்டது

சென்னை, 01 டிசம்பர் 2022:

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS), படூர், அதன் வளாகத்தில் இன்று முதல் வகை ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையத்தை திறந்து வைத்தது. இந்த பயிற்சி மையம் எச்ஐடிஎஸ் பொறியாளர்கள், மாணவர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு டீலர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் அனுபவமிக்க கற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

எச்ஐடிஎஸ் இணை வேந்தர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், எச்ஐடிஎஸ் இயக்குனர் திரு. அசோக் வர்கீஸ், டாக்டர் எஸ்.என். ஸ்ரீதரா, எச்ஐடிஎஸ் பதிவாளர் பொன்ராமலிங்கம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி திரு. பி.கோவிந்தராஜன் இந்த பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

எச்ஐடிஎஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்த மையம் ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கும்.

இந்த பயிற்சி மையம் 11,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி, அமைதியான பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியை எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அனுபவ மையமானது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள், அதன் என்ஜின் மாடல்கள், சிமுலேட்டர்ஸ், ஒர்க்பேஸ் ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ராயல் என்ஃபீல்டு அப்பேரல் மற்றும் உண்மையான மோட்டார் சைக்கிள் பாகங்கள் அடங்கிய தூய மோட்டார் சைக்கிள் சுற்றுச்சூழலை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பையும் பயிற்சியாளர்களுக்கு வழங்கும். அப்பேரல் மற்றும் ஜிஎம்ஏ வடிவமைப்பிற்கான ஒரு இன்குபேஷன் மையம் புதிய வடிவமைப்புகளை கருத்தியல் செய்வதற்கான ஒரு மையத்தை உருவாக்கும்.

அதிநவீன வசதிகளுடன், பயிற்சி மையமானது, பே பட்டறைகள், மோட்டார் சைக்கிள்கள், பல்வேறு மாடல்களின் என்ஜின்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது எங்கள் கள குழுவினர் மற்றும் ராயல் என்ஃபீல்டு சேனல் பார்ட்னர்களின் விற்பனை/சேவை ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையில் சேவை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கல்வி கற்பிக்கும். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அமர்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி அறைகள் நேரடி விளக்கம் கருத்தரங்க தளத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இது பயிற்சியை தடையின்றி அளிக்க உதவுகிறது.

இந்த மையம் எதிர்காலத்தில் பல திறமையான மற்றும் ஆர்வமுள்ள பொறியாளர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.