*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!*
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே பி ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் கிளை சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் மணலிபுதூர், சென்னை மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ்
தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E.,
எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்
ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம்
இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா
படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்
கலை இயக்கம் – வீரசமர்.
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா,
திரை வண்ணன், சக்தி (USA)
நடன அமைப்பாளர் – ரிஷி
உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ்
தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்