கொரோனாவை விரைவாக கண்டறிவதற்காக பத்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்குவதாக முடிவெடுத்தது. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகளைக் கண்டறிய முடியும்,.
இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு லட்சம் கருவிகள் வருவதாக இருந்தது. திட்டப்பட்டி நேற்று இந்த கருவிகள் தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை.
இது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. கருவிகள் வராததற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
விரைவில் சென்னையிலும் சிகிச்சை, மரணம், திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வாகனங்களுக்கான வண்ண பாஸ்கள் வழங்கப்படும்.
செய்தித்தாளை விநியோகிப்பவர்கள் முக கவசம், கையுறை அணிந்து வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..!”