September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்
December 17, 2019

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

By 0 2090 Views

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை.

நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள். 

எனவே வீட்டில் போரடுத்த ரம்யா பாண்டியன் கட்டிய தாவணியோடு மேக்கப் எல்லாம் இல்லாமல் ஸ்டூடியோ புக் பண்னாமல் தன் வீட்டு மொட்டை மாடியிலேயே எடுத்த புகைப்படங்கள் அவர் நடித்த இரண்டு படங்களிலும் இல்லாத புகழை அவருக்குப் பெற்றுத் தந்தன. அந்த மொட்டை மாடி போட்டோ ஷூட் குறித்து மீடியாக்கள் அவரை பேட்டியெல்லாம் எடுத்தன.

ஆனாலும், வாய்ப்பு வர வேண்டுமே..? வைரல் ஆன அளவுக்கு போட்டோஷூட் வாய்ப்புகள் வாங்கித் தராத நிலையில் இப்போது டூ பீஸ் அணிந்து ஒரு ‘மூட்’ போட்டோ ஒன்றை எடுத்து அவரே தன் சமூக வலைதளத்தில் பரவ விட்டிருக்கிறார். அதைப் பார்த்தவர்கள் “இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு..?” என்று வருத்தப்படுகிறார்கள்.

அதைப்பார்த்து ஐட்டம் நம்பர் பாடலுக்கு ஆட வேண்டுமானால், அவரை யாராவது ஒப்பந்தம் செய்தாலும் செய்யலாம். அந்தப்படம் கீழே… 

Ramya Pandian Shocking Still

Ramya Pandian Shocking Still