January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சென்னையில் செல்ப் டிரைவ் செய்த ரஜினி வைரலாகும் புகைப்படம்
July 20, 2020

சென்னையில் செல்ப் டிரைவ் செய்த ரஜினி வைரலாகும் புகைப்படம்

By 0 790 Views

இப்போதைய ஹாட் டாபிக் இதுதான். கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி போயஸ் கார்டனில் இருந்து அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ஏன் செல்ப் டிரைவ்…? கொரோனா பரவல் காரணமாக டிரைவர்கள் யாரையும் இப்போது சொந்த உபயோகங்கள் கருதி அனுமதிப்பதில்லை யாம்.

அதனால் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

முக கவசம் அவருக்கு ஒரு வகையில் வசதிதான்… ஆனாலும் செல்ஃப் டிரைவ் நலலது இல்லையே தலைவா..?