சென்னை மாநகராட்சி இந்த ஆண்டுக்கான சொத்து வரி வசூலித்து வருகிறது இதன் அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த குறைவான காலகட்டத்தில் திருமண மண்டபத்துக்கு வருமானம் இல்லாத அடிப்படையில் வரி செலுத்த விலக்கு கேட்டு உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் இது போல் உயர் நீதிமன்ற நேரத்தை வீணாக்க கூடாது என்று அறிவுறுத்தியது.
ரஜினிகாந்ததொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி அனிதா ரஜினிகாந்த் வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி கண்டனத்தை அடுத்து வரி செலுத்த விலக்கு கேட்ட வழக்கை திரும்பப் பெற ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார்.