October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹீரோ ஆக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கித்தந்த ரஜினி
October 7, 2019

ஹீரோ ஆக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கித்தந்த ரஜினி

By 0 717 Views
Rajini at Kalaignanam's House

Rajini at Kalaignanam’s House

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொது மேடையில் ரஜினி சொல்லி இருந்தார் இல்லையா?

 
அப்படிச் சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றாராம் ரஜினி.
 
Rajini Keeps Promise

Rajini Keeps Promise

அதன்படி கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34, விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்று  படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்குகளும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.

 
இன்றைக்கு 07.10.2019 அன்று காலை பத்து மணிக்கு தான் வாங்கிக் கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். புது வீட்டின் பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார்.
 
அங்கு ரஜினிக்கு இனிப்பு தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி… “வீடு தெய்வீகமா இருக்கு…” என மகிழ்ச்சி தெரிவித்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்கிறார்.