June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது
April 24, 2020

போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது

By 0 477 Views

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம்.

நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள்.

போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர்.

இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? யார் அதிக உதவி செய்தார்கள் என்ற வார்த்தை போர் கைகலப்பாக மாறி விட்டது.

இதில் ஒருவரை ஒருவர் மற்ற நடிகரைப் பற்றி தரக்குறைவாக பேசி சண்டையிட்டு உள்ளனர்.  மோதல் உச்சக்கட்டத்தை எட்டி ரஜினி ரசிகர் தினேஷ் பாபு, விஜய் ரசிகர் யுவ்ராஜை நெஞ்சில் கை வைத்து வேகமாகத் தள்ளி இருக்கிறார்.

இதில் நிலை தடுமாறி யுவ்ராஜின் தலை கல்லில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இப்போது ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் கள்ளசாராயம் ஏதும் உட்கொண்டு சட்டையிட்டனரா? அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.