March 19, 2024
  • March 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ
September 22, 2020

ரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ

By 0 788 Views

முதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது.

யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது…

பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது.

அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள்  படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் அது.

இவரது தந்தை ஏ.பிச்சை ஒரு காலத்தில் மதுரையில் மிகப்பெரிய காண்ட்ராக்டராக இருந்தவர். மதுரை நெல்பேட்டை அருகே உள்ள அண்ணா சிலை இவர் அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், ‘சங்கம் வைத்து ரஜினி மன்றம் வளர்த்த’ அவரது மகன் முத்துமணி வெறும் 3 ஆயிரம் ரூபாய் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்.

மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த தகவல்.

“மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் ரஜினி மொத்தமே 20 நிமிடங்கள்தான் வருவார். அதுவும் ரத்தப்புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, சாவோடு போராடும் கதாபாத்திரம்.

ஆனால், கேட்டைத் திறந்துகொண்டு அவர் அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்படியே ஈர்த்தது. கூடவே, ஓரிரு நிமிடம் மட்டுமே வருகிற அவரது இளமைக்கால காட்சியில் ஸ்டைல் காட்டுவார். அதற்காகவே அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.

அவரது இரண்டாவது தமிழ்ப்படமான மூன்று முடிச்சு 22.10.1976ல் தான் வெளிவந்தது. ஆனால், பிப்ரவரியிலேயே (10.2.1976) ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர்’ மன்றத்தைத் தொடங்கிவிட்டோம்..!

அவருக்கு கடிதம் எழுதிவிட்டுத்தான் தொடங்கினோம். பிறகு அவரை நேரில் சந்தித்தபோது, ரொம்ப சங்கடப்பட்டார்.

“எம்ஜிஆர், சிவாஜி மாதிரியான பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க. நான் சின்ன நடிகன். முதல்ல ஸ்டேன்ட் பண்ணணும். மன்றம் எல்லாம் வேண்டாம்” என்றுதான் சொன்னார்.

அடுத்து அவர் பைரவி படித்தில் ஹீரோவானதும், ஸ்டைல் ஹீரோ ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினோம். அப்போது ரஜினியோடு ரொம்ப நெருக்கமாக இருந்தோம். 1978ல் மதுரை அலங்கார் தியேட்டர் அருகே சிவாஜி ரசிகர்களோடு ஏற்பட்ட மோதலில், எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தார்கள்.

என் அப்பா அம்மா இருவருமே இறந்துவிட்டதாலே, ரஜினிதான் எனக்குத் திருமணம் செய்துவைத்தார். அவரது வீட்டில், அவர் எடுத்துத்தந்த தாலியைத்தான் என் மனைவி லட்சுமியின் கழுத்தில் கட்டினேன்.

இன்னிவரைக்கும் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் இருவருக்குமே எங்கள் குடும்பம் நல்ல அறிமுகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போய் சந்தித்துவிடுவேன். இதுவரையில் அவரிடம் எதுவுமே நான் கேட்டதில்லை. இனிமேலும் கேட்க மாட்டேன்..!

இப்படியான ரசிகர்கள்தான் ரஜினியின் மிகப்பெரிய சொத்து. முத்துமணியிடம ரஜினி பேசிய ஆடியோ கீழே…