‘தி மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் எழுதிய ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவலாகும்.
அதை திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரை கதையாக Drew Goddard எழுத, Phil Lord மற்றும் Christopher Miller இப்படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறார்கள்.
கதை இதுதான்…
சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியை அழிக்க, அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்.
இயல்பில் விண்வெளியில் பறக்கும் அனுபவம் இல்லாதவரான அவர் மட்டும் அண்டத்தில் தனியாக மாட்டிக் கொள்ள, அவரும் கோமாவில் விழுகிறார்.
அதிலிருந்து மீண்டெழும் அவர் தன் கடமையை நினைவு கூர்ந்து அதை நிறைவேற்ற எப்படி எல்லாம் செயல்படுகிறார் என்பதுதான் கதை.
அண்டத்தில் தனிமையில் மாட்டிக் கொள்ளும் அவருக்கு துணையாக விண்ணுலக உயிரி ஒன்று கிடைக்க அவர்கள் இருவருக்கும் இடையேயான புரிந்து கொள்ளலும் நட்பும் நம்மை சுவாரசியத்தில் ஆழ்த்துகின்றன.
விண்வெளியில் எதிர்பாராமல் கிடைக்கும் அந்த நட்பான உயிருக்கு ராக்கி என்று பெயரிட்டு அழைப்பதுடன் அது செய்யும் லூட்டிகளை குழந்தைகள் கூட ரசிக்கலாம்.
மற்ற ஹாலிவுட் படங்களை போல் இல்லாமல் இந்த படம் இந்திய படங்களை போன்று இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் திரையில் ஓடுவது ஆச்சரியம்தான்.
Greig Fraser கையாண்டிருக்கும் ஒளிப்பதிவு அபாரம். அண்டத்துக்கான லைட்டிங் அமைப்பது என்பது சிக்கலான வேலைதான். அதை திறம்பட நிறைவேற்றி இருக்கிறார் அவர்.
படத்தின் தலையாய பொறுப்பு Daniel Pemberton மேற்கொண்டிருக்கும் இசைதான். இதுவரை நம் செவிகள் கேட்காத ஒலிகளை எல்லாம் அற்புதமாக இசையில் கோர்த்து பிரமிக்க வைத்திருக்கிறார்.
லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது!
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்:
பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship
இசை- Daniel Pemberton; ஒளிப்பதிவு- Greig Fraser
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா இந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறது.
– வேணுஜி