பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியது…
“கடந்த 6 மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன்.
ஆனால், தேர்தல் முடிவில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.
அதேசமயம் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
இன்னும் 1 வருடத்தில் நடைபெறவுள்ள பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் எங்களது கட்சி சார்பாக வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.
அதே நேரம், சினிமாவில் நடிப்பது எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிப்பேன். கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்..!”