October 15, 2025
  • October 15, 2025
Breaking News
March 4, 2019

பரத் பெண் வேடமேற்கும் பொட்டு 1000 தியேட்டர்களில்

By 0 1100 Views

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’

இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

pottu movie news

pottu movie news

பரத் நடித்த படங்களிலேயே வடிவுடையான் எழுதி இயக்கிய இந்தப் படம்தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறார்களாம்.

“மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள பயங்கரமான ஹாரர் படமான இதில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்..!” என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.

படத்தைக் காட்டுங்க… ரசிக்கிறோம்..!