October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மலையாளப் படங்களின் இறுதிக்கட்ட பணிகளுக்கு கேரள அரசு அனுமதி
May 4, 2020

மலையாளப் படங்களின் இறுதிக்கட்ட பணிகளுக்கு கேரள அரசு அனுமதி

By 0 672 Views

கேரளாவில் மலையாளப் படங்களின் இறுதிகட்டப் பணிகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியது.

அதிகபட்சம்5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார்.

இதையடுத்து, கேரளாவில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் பகுதியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள் இன்று முதல் தொடங்கின.