July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அன்புமணி ராமதாஸ் கவனத்துக்கு – தம்மடிக்கும் நிர்வாண பிசாசு
August 3, 2021

அன்புமணி ராமதாஸ் கவனத்துக்கு – தம்மடிக்கும் நிர்வாண பிசாசு

By 0 565 Views

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றி இருக்கிறார் என்ற செய்தி எப்படியோ வலைதளங்களுக்கு கசிந்து அது ஒரு கட்டத்தில் ட்ரெண்டிங் ஆனது.

செலவில்லாத பப்ளிசிட்டி என்பதால் அதுகுறித்து எந்த எதிர்ப்பையும் மிஷ்கின் தரப்போ தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இந்த முதல் பார்வையில் ஒரு பெண் நிர்வாணமாக கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி குளிக்கும் பாத் டப் ஒன்றில் படுத்துக் கிடப்பதாக இருக்கிறது. தலையும், உடலும் தெரியாவிட்டாலும் அது ஆண்ட்ரியாவாகத்தான் இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அதனால் இதில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அத்துடன் வெளியே தெரியும் ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டு இருக்க அவர் தம் மடிப்பதாகவும் தெரிகிறது.

இதைப் பார்த்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தால் மேலும் இது படத்துக்கு பப்ளிசிட்டி ஆக அமையும் என்று மிஷ்கின் நினைத்திருக்கலாம்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

விரைவில் இப்படத்தின் First Single வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Pisasu 2 first look