July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 1, 2019

பிலிப்பைன்ஸ் வெள்ளம் 1 லட்சத்து 30 பேர் பாதிப்பு 75 பேர் பலி

By 0 961 Views

பிலிப்பைன்ஸ் நாட்டின் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்ததில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 

கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் அனேக இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முற்றிலும் முடங்கியது.

வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது

பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது..!