October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு
March 18, 2021

கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு

By 0 630 Views

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது.

ஆனால் புல்லட் பிரபு என்பவர் பண்டாரத்தி புராணம் ஆண்டி பண்டாரம் என்ற சமூகத்தை காயப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், படம் வெளியாவதற்கு முன்பு அந்த பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.