August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நேற்று வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது முதல் மனைவி போலீஸில் புகார்
June 28, 2020

நேற்று வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது முதல் மனைவி போலீஸில் புகார்

By 0 783 Views
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிய, பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 
 
சரி… இந்தத் திருமணமாவது அவர் வாழ்க்கைக்கு கை கொடுக்கட்டும் என்று அனைவரும
 வாழ்த்தினார்கள்.
 
அந்த வாழ்த்துகள் அடங்குவதற்குள் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.
 
பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். 
 
கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றாலும் நேற்றைய திருமணம் திடீர் திருமணம் அல்ல… முன்னரே அறிவித்து நடந்ததுதான் என்ற நிலையில் பீட்டர் பாலின் மனைவி அப்போதே திருமணம் நடைபெறாமல் தடுத்திருக்க முடியுமே என்ற கேள்வி எழாமலில்லை.