நடிகை நிலாவை நினைவு இருக்கிறதா..? தமிழில் மருதமலை, அன்பே ஆருயிரே, ஜாம்பவான், காளை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நிலா நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் மீரா சோப்ரா என்று அறியப்பட்டவர். சமீபத்தில் அவர் ஆன்லைன் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்டிருந்தார். அதற்கு அவரை பற்றி எனக்கு தெரியாது. நான் அவரது ரசிகை கிடையாது என நிலா […]
Read Moreசின்னத்திரையான ஓடிடி-யில் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். அமேசான் சார்பில்ல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ள இதன் பணிகள், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மணிரத்னம் இன்சார்ஜில் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். இதில் […]
Read Moreதிரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று […]
Read Moreசில நாட்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக பிரசன்னா “இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்..?” என்று கேட்டிருந்தார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் நேற்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான […]
Read Moreகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன. இதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள். டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் […]
Read Moreதிரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள 9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார். குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் […]
Read More