August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 10, 2020

முதல் படம் முடியாமலேயே லாக் டவுனில் மரணம் அடைந்த இயக்குனர்

0 798 Views

“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் 09.06.2020 அன்று காலமானார். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். “உடுக்கை” படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்களே மீதி உள்ளது. இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப் பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் […]

Read More
June 9, 2020

பரிதாப நிலையில் பாடகர் டி எம் சவுந்தரராஜன் சகோதரர்

0 900 Views

திரையிசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். டிஎம்எஸ்சை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர் அவர். அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி […]

Read More

டிவி செய்தியாளர் வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ – 4 பிரிவுகளில் வழக்கு

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார். அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “வரதராஜன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய இட வசதி இருக்கிறது. இதனால் […]

Read More
June 8, 2020

விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் அனிருத் துருவ் விக்ரம் இணையும் பிரம்மாண்டம் ‘சீயான் 60’

0 928 Views

சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். இதில் முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். […]

Read More
June 8, 2020

உலக மக்கள் சேர்ந்து படித்த ஒரே பாடம் கொரோனாதான் – காமெடி சூரி சீரியஸ் பேச்சு

0 913 Views

நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். “வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் […]

Read More