July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 23, 2024

கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

0 395 Views

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஐஸ்வர்யா […]

Read More
April 22, 2024

கல்கி 2898 AD படத்தில் அமிதாப் தோற்றம் நெமாவாரில் வெளியிடப் பட்டது

0 398 Views

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் […]

Read More
April 21, 2024

Never Escape திரைப்பட விமர்சனம்

0 827 Views

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ். கதை இதுதான்… ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக ஊரில் புரளி கிளம்ப அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு யூட்யூப் சேனல் அந்தத் தியேட்டருக்குப் படையெடுக்கிறது. அதே நேரம் ஒரு விபத்து தொடர்பாக போலீஸிடம் இருந்து […]

Read More
April 21, 2024

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

0 2398 Views

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல். ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..?  இதை யோசித்து ஒரு திரைக் கதையை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் தானே நாயகனாக நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன்.  ‘இப்படி பாதிக்கப்பட்ட நிரபராதிகளை வெளியே கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு […]

Read More
April 20, 2024

வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ‘டியர்’ படக்குழு

0 344 Views

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. […]

Read More
April 19, 2024

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் – விஷால்

0 415 Views

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக […]

Read More
April 18, 2024

சிறகன் திரைப்பட விமர்சனம்

0 770 Views

பட்ஜெட் பெரிதாக இல்லாமல், பெரிய நட்சத்திரங்களும் இல்லாத படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி வித்தியாசமான ஸ்கிரிப்ட்டில் படம் எடுப்பது தான்.  அப்படித்தான் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது நான் லீனியர் படத் தொகுப்பில் ஹைப்பர் லிங்க் திரைக்கதை அம்சம் கொண்ட உத்தி. ஒரு இரவில் ஒரு அரசியல்வாதியும் பயிற்சி வழக்கறிஞரும் கொல்லப்படுகிறார்கள் அதை பார்த்த ஒரே சாட்சியாக இருக்கிறார் வழக்கறிஞராக […]

Read More