பெரிய ஹீரோக்கள் கிடைக்காத சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கதைதான் ஹீரோ. இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கும் இயக்குனர் சகாயநாதன் நமக்கு நன்றாகத் தெரிந்த களத்தில்… ஆனால் சற்றே வித்தியாசமான கதையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது ‘சிந்து நதிப்பூ’ பட இயக்குனர் செந்தமிழனின் திரைக்கதை, வசனம். 90களில் நடக்கிறது கதை. அதனால் படத் தொடக்கத்திலேயே ‘தகவல் தொடர்புக்கான சாத்தியங்கள் இல்லாத சூழலில் இளைஞர்கள் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிரமப்பட்டார்கள் என்பதுதான் […]
Read More“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..! சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற நிகழ்வை நடத்தியது. இதற்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வமிக்க இந்தப் போட்டியில் 6 […]
Read Moreசீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் […]
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினியின் பரம ரசிகராக இருக்கும் ஹீரோ விஜய் சத்யாவின் பெயரும் இந்த படத்தில் ரஜினிதான். படத்தை இயக்கி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கட்டுமஸ்தான விஜய் சத்யா, கார்கள் மீது கொண்ட காதலால் தனியாக கேரேஜ் வைத்திருக்கிறார். மனைவி ஷெரின் மற்றும் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருபவருக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது. அமைச்சரின் மகன் கொலை […]
Read Moreஹிட்லர் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வந்தாயிற்று. தமிழிலும் கூட ஒரு முறை வந்த நிலையில் மீண்டும் அதே தலைப்பில் படம் எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும், ஹீரோவையும் என்னவென்று சொல்ல..? பணக்காரர்களிடம் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் பழசிலும் பழைய ராபின்ஹூட் கதைதான். அதை புதிதாகவாவது சொன்னார்களா என்றால் அப்படியும் இல்லை. உலகறிந்த திரைக்கதை தான். மதுரையில் இருந்து வேலைக்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி முதல் வேலையாக செய்வது ரியா […]
Read More96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது ஓரிரவில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்தான் படம். ஒரே ஒரு வித்தியாசம் முன்னதில் காதல். இதில் உறவுமுறை. 96 படத்தில் காதல் அடிநாதம் என்பதால் ஒரு நாயகனும் நாயகியும் சில […]
Read Moreசென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. தீவிரமான சீர்பிறழ்வுகளை தொடர்ந்து இதயத்தம்பம்/இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு சிகிச்சையை வழங்குவதற்கென இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல […]
Read More