March 24, 2025
  • March 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நீயா 2 படத்தில் நடிக்க நிறைய யோசனை செய்தேன் – ராய் லஷ்மி
March 9, 2019

நீயா 2 படத்தில் நடிக்க நிறைய யோசனை செய்தேன் – ராய் லஷ்மி

By 0 1001 Views
Raai Lakshmi

Raai Lakshmi

‘ஜம்போ சினிமாஸ்’ தயாரிப்பில் ஜெய், ராய் லஷ்மி, வரலஷ்மி நடிக்கும் ‘நீயா 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விருந்தினர் பேசியதிலிருந்து…

இயக்குநர் வெற்றி மாறன் – 

“இந்தப்பட இயக்குநர் சுரேஷும் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது..!”

ராய் லட்சுமி – 

“2 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன்.  சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதை. இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி..!” 

Neeya 2

Neeya 2

இயக்குநர் எல். சுரேஷ் 

“பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் ‘எத்தன்’. ஒரு இயக்குநருக்கு படம் கிடைப்பது என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.

இந்தப்படத் தயாரிப்பாளர் பாம்புக்கு படம் பண்ண வேண்டும் என்று கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்த கதை தோன்றியது. ‘நீயா’ படத்தில் நிஜ பாம்பைதான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம் தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.

இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம். 

வரலக்ஷ்மிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். இப்படம் பெரியதாக அமைய காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மி தான். அவர்களைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி..!”