September 13, 2026
  • September 13, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்
January 25, 2020

நாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்

By 0 873 Views

பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன.

எனவே, நாடோடிகள்2 படத்துக்கு பூஜை போட்டு இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்கம் – சமுத்திரக்கனி.

நாடோடிகள் 2 படப்பிடிப்பு 2018-லேயே நிறைவுபெற்று 2 வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் அறிவிப்பு தேதி அறிவிக்கப்படும். பின் தள்ளிப்போகும். இதனையடுத்து, இந்த முறை படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

அப்படி ஜனவரி 31 அன்று வெளியாகவிருக்கும்  படத்துக்காக புதிதாக ஒரு ட்ரெய்லரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

அது கீழே…