April 20, 2024
  • April 20, 2024
Breaking News
December 4, 2019

ஆபாசமாக பேசிய மீனா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

By 0 1826 Views

“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..?

‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது.

அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரீஸில்தான் இப்படி ஒரு வார்த்தையை ஆனால், இந்தியில் பேசியிருக்கிறார். “லவ…..பால்” என்று அவர் அதில் பேசியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. 

அதன் நேரடித் தமிழ்ப்பொருள்தான் மேலே நாம் சுட்டிக் காட்டியிருப்பது. வெப் சீரீஸ் என்றாலே என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம், பேசலாம் என்பது வழக்கமாகி வருகிறது. இந்தியில் எடுக்கப்படும் வெப் சீரீஸ்கள் முழுக்கவே ஒழுக்கக்கேடான மனித உறவுகளையே மையப்படுத்தி எடுக்கப்படுகின்றன.

அதை நோக்கிய ஒரு பயணமாகவே தமிழ் வெப்சீரீஸ்களும் எடுக்கப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. எந்த சென்சாருக்கும் உட்படாமல் இப்படி சகட்டுமேனிக்குக் கெட்டவார்த்தைகள் இந்த சிரீஸ்களில் இடம்பெறுகின்றன. இது ஒரு விளம்பர யுக்தியாகவே திணிக்கப்படுவதுதான் வருத்தமாக இருக்கிறது.

அதையும் மீனா போன்ற குடும்பங்களின் அபிமானம் மிக்க நடிகை பேசும்போது அது கலாச்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த வெப்சீரீஸின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட மீனாவிடமே அதைக் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். ஆவ்னால், ஜீ5-ன் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட ரமேஷ் கிருஷ்ணன் “கதைக்குப் பொருத்தமாக வரும்போது அது தவறில்லை…” என்று வாதிட்டதுடன் அதை இப்படி நியாயப்படுத்தினார்.

“இது டிவியில் பார்க்கப்படும் சீரீஸ் அல்ல. ஜீ5 ‘ஆப்’பில் பார்ப்பதற்காக தயாராகும் வெப் சிரீஸ்கள். அவை எல்லாமே அடல்ட் கன்டென்ட்தான். வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியது. மீனா நடிக்கிறார் என்பதற்காக நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து முக்கியமாக வயதுக்கு வராதவர்கள் பார்க்க வேண்டியதில்லை..!”

அத்துடன் விடாமல் “இப்போது வரும் படங்களிலேயே இப்படி புழக்கத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளைப் பேசுவது வழக்கமாகி விட்டதே..?” என்றார்.

எப்படி இருக்கிறது பாருங்கள்…? அதற்காகத்தான் இப்படியான ஆபாச வசனங்களை அனுமதிக்கக் கூடாதென்று இயக்குநர்களிடமும், சென்சாரிடமும் நாம் எப்போதும் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறோம். இவையே இப்படியான தவறான செயல்களுக்கு முன்மாதிரியாக ஆகி விடுவது வருத்தமான விஷயம்தான்..!

சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா..?