September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்தால் அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் பார்க்கலாம்
January 27, 2021

இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்தால் அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் பார்க்கலாம்

By 0 604 Views

ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம்.

மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இது குறித்து அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ‘அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்..’ என்றார்.

தனது படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது: மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது. இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது. எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம்..!”