July 31, 2026
  • July 31, 2026
Breaking News
November 16, 2020

லோஸ்லியா தந்தை மரிய நேசன் மாரடைப்பால் மரணம்

By 0 820 Views

இலங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த லோஸ்லியா தமிழ் படங்களில் நடிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர். 

இங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் இடம்பெற்று அதில் அவருடன் பிக்பாஸ் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த கவினுடன் காதல் வசப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க அறியப்பட்டவர்.

பிக்பாஸ் புகழுக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில்  காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மரிய நேசனும் லோஸ்லியா பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தபோது சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த லோஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் லோஸ்லியா உடன் அவரது தந்தை மரிய நேசனும் புகழ் பெற் றார்.

இந்நிலையில் வந்திருக்கும் மரிய நேசனின் இந்த மரணச் செய்தி எல்லோரையும் உலுக்கி விட்டிருக்கிறது.

Mariyanesan with Losliya

Mariyanesan with Losliya