September 4, 2025
  • September 4, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரம்யா கிருஷ்ணன் சொகுசு காரில் ஏராள மது புட்டிகள் – டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட ரம்யா
June 13, 2020

ரம்யா கிருஷ்ணன் சொகுசு காரில் ஏராள மது புட்டிகள் – டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட ரம்யா

By 0 706 Views

திரையுலகில் எத்தனை சுற்றுகள் வந்தாலும் தாக்கு பிடிப்பவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதுவரை மூன்று சுற்றுகள் வந்துள்ள அவர் மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டி தாக்குப்படித்து வருகிறார்.

இரண்டாவது சுற்றில் நீலாம்பரி ஆக மூன்றாவது சுற்றில் ராஜ மாதாவாக வந்து ரசிகர்களின் எண்ணங்களில் நீங்கா இடம் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.

இதுவரை எந்த புகாரிலும் சிக்காத அவர் இன்று யாரும் எதிர்பாராத ஒரு புகாரில் சிக்கி விட்டார்.

பாண்டிச்சேரியில் இருந்து திரும்பி வந்த அவரது சொகுசு காரில் இருந்து எடுக்க எடுக்க ஏராள மது புட்டிகள் சிக்கின.

Liquor bottles seized from Ramya Krishnan carமுட்டுக்காடு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தனர். அப்போது அந்தக் காரில் ரம்யா கிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணனும் இருந்ததாக கூறப்படுகிறது.

96 பீர் மற்றும் 6 பிளாக் ரெட் லேபிள் மது புட்டிகளும சோதனையில் சிக்கினவாம்.

கைதான டிரைவரை ரம்யாகிருஷ்ணன் தன் சொந்த ஜாமீனில் பிணை எடுத்து அழைத்து சென்றிருக்கிறார்.

ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் பறிமுதல் செய்யப்பட்ட மது புட்டிகள் குறித்து ஏதும் விளக்கம் சொல்வாரா, பார்க்கலாம்.