September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாரதிராஜாவின் கண்களான ஒளிப்பதிவாளர் பி கண்ணன் மறைவு
June 13, 2020

பாரதிராஜாவின் கண்களான ஒளிப்பதிவாளர் பி கண்ணன் மறைவு

By 0 665 Views

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம் சிங்கின் மகன் கண்ணன். இவரது மற்றொரு சகோதரர் எடிட்டர் பி.லெனின்.

கண்ணனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், மதுமதி, ஜனனி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

சுமார் 40 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவரை தன் கண்கள் என்றே பாரதிராஜா சொல்லி வந்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் கண்ணன்.

சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கண்ணனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

அதன் காரணமாக ஏற்பட்ட உடல் அறிவால் அவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவருக்கு திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.