January 23, 2026
  • January 23, 2026
Breaking News
July 25, 2018

கொலைகாரனாகத் தயாராகும் விஜய் ஆன்டனி..

By 0 1381 Views

சினிமாவில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சென்டிமென்ட்களில் ஒன்று நெகடிவ்வாக தலைப்புகள் வைக்கக் கூடாதென்பது. அதை உடைத்துக் காட்டியவர் விஜய் ஆன்டனி.

எதெல்லாம் கூடாது என்றார்களோ அதை வைத்தே வென்றவர். ‘பிச்சைக்காரன்’, ‘எமன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து வெற்றி பெற்றவர் அதே வரிசையில் இப்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் ‘கொலைகாரன்’.

kolaigaran

kolaigaran

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பி.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரூ லூயி இயக்குகிறார்.

விஜய் ஆன்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் முக்கிய வேடங்களில் நாசர், சீதா, வி.டி.வி. கணேஷ் நடிக்கின்றனர்.

வளர்ந்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

எப்படியோ ‘கொலைகாரன்’ விஜய் ஆன்டனிதானே..? அதுதானே அவர் யு.எஸ்.பி..?

kolaigaran

kolaigaran