கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் 22 அணைகளைத் திறந்து விடும் அளவுக்கு மழை கொட்டிக்கொண்டிருப்பதால் ஆற்றுத் தண்ணீர் அதிகமாக வெளியேறி இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
முப்படைகள் முகாமிட்டு முழு மூச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வெள்ள சேதம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளதை அடுத்து மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரூ.100 கோடி உடனடியாக அனுப்பப்படும் என அறிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் கோரிக்கை விடுத்ததை அடுத்து பல மாநிலங்களிலும் இருந்து நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளக்காடாக கேரளம் இருக்கும் நிலையில் ஓணம் பண்டிகை புதங்கிழமை தொடங்கவிருக்கிறது.
ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை வழக்கமாக அரசே.முன்னின்று நடத்தும். ஆனால, இந்த வருடம் மழை வெள்ளத்தால் மாநிலமே துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.
அதற்கு செல்வாகக் கூடிய பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். நல்ல யோசனைதான்.