காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் அறிவிப்பு
சென்னை, 18 நவம்பர் 2023: சென்னை மாநகரின் ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 நிகழ்வின் போது, தனது வளாகத்தில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதை காவேரி மருத்துவமனை- ஆழ்வார்பேட்டை பெரு மகிழ்வுடன் அறிவித்திருக்கிறது.
உலகத்தரத்தில் சுகாதார சேவைகள் வழங்கலில் புதிய அளவுகோல்களை நிறுவும் குறிக்கோளோடு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்பட்டிருக்கிறது. இதய அறிவியலில் விழிப்புணர்வை ஊக்குவிப்பது மற்றும் மேம்பட்ட, நவீன சிகிச்சைகளை வழங்குவது என்ற நோக்கத்தின் மீது ஆழமான பொறுப்புறுதியை கொண்டிருக்கும் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் – ஐ புகழ்பெற்ற இதயவியல் நிறுவனரான பத்மஸ்ரீ டாக்டர் கே. எம்.செரியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதயவியல் சிகிச்சை துறையில் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான நவீன மேம்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த நிகழ்நிலை தகவல்களை, எடுத்துரைப்பதற்கான நோக்கத்தோடு காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 என்ற இந்நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது. இத்துறையில் பகழ்பெற்ற நிபுணர்களின் சிறப்புரைகளும், நவீன ஆராய்ச்சி குறித்த விளக்க காட்சிகளும் மற்றும் இதய பராமரிப்பில் சமீபத்திய மேம்பாடுகள் குறித்த விவாதங்களும், கலந்துரையாடல்களும் இந்த இருநாள் நிகழ்வில் முக்கிய இடம்பெற்றன. நாடெங்கிலுமிருந்து 250-க்கும் அதிகமான பிரதிநிதிகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்று இருப்பது இக்கருத்தரங்கு நிகழ்வின் வெற்றியினை பிரதிபலிக்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் முக்கிய அறிவையும். தகவலையும் பலரும் அறியுமாறு செய்வதிலும் மற்றும் ஒத்துழைப்பு உணர்வை பேணி வளர்ப்பதிலும் இதுபோன்ற கருத்தரங்கு நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிப்பதையும், மருத்துவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு சுட்டிக்காட்டியது.
இந்தியா மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று வழங்கிய சிறப்புரைகள், இக்கருத்தரங்கின் சிறப்பை மேலும் செழுமையாக்கின. தங்களது நிபுணத்துவத்தையும் புதுமையான கண்ணோட்டங்களையும் சிறப்புரை நிகழ்த்திய ஆளுமைகள் பகிர்ந்து கொண்டது. பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதில் ஐயமில்லை. இக்கருத்தரங்கு நிகழ்வின் விவாதப்பொருளாக கரோனரி தமனி நோய் உடற கட்டமைப்பு சார்ந்த இதயநோய், PCI (சருமத்தின் ஊடாக கரோனரி இடையீட்டு சிகிச்சை) கடுமையான மாரடைப்பால் ஏற்படும் கார்டியோஜெனிக் அதிரச்சி, இதயம் சார்ந்த மின் உடலியங்கியல் இதயம் மற்றும் துரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை ஆகிய பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றிருந்தன இத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விரிவான புரிதலையும், தெளிவான விளக்கத்தையும் பங்கேற்பாளர்கள் பெறுவதை இந்த விவாதங்களும், அமரர்வுகளும் உறுதி செய்தன.
இக்கருத்தரங்கு நிகழ்வின் போது, இதயவியல் துறையில் சிறப்பான பங்களிப்புடன் சாதனை படைத்திருக்கும் மருத்துவ நிபுணர்களை காவேரி மருத்துவமனை கவுரவித்து பாராட்டியது. இதய மார்பக அறுவைசிகிச்சை பிரிவில் சிறப்பான பங்களிப்புக்காக டாக்டர் ஏ ஆர் ரகுராம், இடையீட்டு இதயவியல் பிரிவில் நேர்த்தியான பங்களிப்பிற்காக டாக்டர் முல்லாசரி அஜித் எஸ், குழந்தைகளுக்கான இதயவியல் பிரிவில் சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர் ராகவன் சுப்ரமணியன் மற்றும் இடையீட்டு இதயவியல் மற்றும் மின் உடலியங்கியல் பிரிவில் சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர் டி ஆர் முரளிதரன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி காவேரி மருத்துவமனை கவுரவித்தது.
காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது குறித்து தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை இயக்குநர் & செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: இந்த சர்வதேச கருத்தரங்கு, இதயவியல் துறையில் பன்னாட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடவும் ஒத்துழைப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளவும் நம் நாட்டை சேர்ந்த மருத்துவ நிபுணர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும். நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை விளைவுகளின் மூலம் பயனளிக்கிற ஒரு நல்ல சூழலை உருவாக்க, பிற நாடுகளை சேர்ந்த சக மருத்துவர்களின் அனுபவத்தையும், அறிவையும் திறனையும் நம் மருத்துவர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றை சிறப்பாக பயன்படுத்தவும் இது உதவும்.
சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி, இம்பெல்லா, ஹைபிரிடு முறையிலான பைபாஸ் அறுவைசிகிச்சைகள் மற்றும் இதய உறுப்புமாற்று சிகிச்சை போன்ற மிக நவீன சிகிச்சை செயல்முறைகளை நாட்டில் முதன்முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைப்பதில் காவேரி மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் ல் மிக சிக்கலான நேர்வுகளுக்கும் முழுமையான சிகிச்சையை வழங்கி குணப்படுத்த சர்வதேச அளவில் பயிற்சி பெற்றிருக்கும் இதயவியல் மருத்துவர்கள், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள். மயக்க மருந்தியல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள், – மற்றும் செவிலியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய விரிவான குழுவுடன் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தனது சிறப்பான சேவையை வழங்கும்” என்று டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மேலும் கூறினார்.