May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • ஆண்கள் புற்றுநோய் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்தும் ‘நோ ஷேவ் நவம்பர்’
November 29, 2023

ஆண்கள் புற்றுநோய் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்தும் ‘நோ ஷேவ் நவம்பர்’

By 0 109 Views

ஆண்களுக்கு வரும் புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்த “நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) இயக்கத்தில் பங்கேற்கும்
காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள்

சென்னை: 29 நவம்பர், 2023:“நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) மற்றும் “மொவம்பர்” (Movember)ஆகிய இயக்கங்கள் உலகளவில் பிரபலமானவை. இந்த இயக்கங்கள் வழங்கிய உத்வேகத்தினால் தூண்டப்பட்டிருக்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்ன் புற்றுநோயியல் துறையின் ஒன்பது மருத்துவர்கள், நவம்பர் மாதம் முழுவதும் முகசவரம் செய்யாமல் (டாக்டர் முகுந்த் கே, எலும்பியல் நிபுணர், டாக்டர் வெங்கட்ராமன் கார்த்திகேயன், நரம்பியல் நிபுணர், டாக்டர் ஆனந்த சுப்ரமணியன், நுரையீரல் நிபுணர், டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மருத்துவ இயக்குனர், டாக்டர் ஏஎன் வைத்தீஸ்வரன் இயக்குனர் கதிர்வீச்சு புற்றுநோயியல், டாக்டர் அஸ்வின் ஏஎன், கதிர்வீச்சு புற்று நோயியல் நிபுணர், டாக்டர் முரளிதரன் பார்த்தசாரதி அறுவை சிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி, டாக்டர் அருண்குமார் கார்த்திகேயன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் வேல்முருகன் டெய்சிங் மயக்க மருந்து நிபுணர் இதில் உள்ளடங்குவர்)
தாடி மீசையை வளர்க்கும் சவாலை கையில் எடுத்திருக்கின்றனர்.

ஆண்களது புற்றுநோய் மற்றும் உடல் நலபிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த புதுமையான செயல்திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பேணுவது மற்றும் புற்றுநோயை பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதன் முக்கியத்துவம் பற்றி ஆண்கள் மத்தியில் வெளிப்படையான உரையாடல்களையும், விவாதங்களையும் ஊக்குவிப்பதும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் குறிக்கோளாகும்.

உடல் நல பராமரிப்புத்துறையில் இயங்கும் முன்னணி நிறுவனங்களது சமீபத்திய ஆய்வுகளது புள்ளிவிவரங்களின்படி குறிப்பிடத்தக்க கணிசமான உடல்நல சவால்களை ஆண்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இவைகளுள் புற்றுநோய் மிகமுக்கியமான அதிக கவலைக்குரிய சவாலாக இருக்கிறது. ஆண்மைசுரப்பி(பிராஸ்டேட்) புற்றுநோய், விரைபுற்றுக்கட்டி மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவை ஆண்களில் புற்றுநோய் தொடர்பாக ஏற்படும் உயிரிழப்புகளின் முன்னணி காரணங்களுள் சிலவாகும்.

புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொடக்க நிலையிலேயே அவற்றை கண்டறிவதற்கான தேவை மிக முக்கியமானது;

ஏனெனில் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பினை கண்டறிந்து உரிய சிகிச்சையை அளிப்பது, சிகிச்சையின் விளைவுகள் மீது அதிகளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கிறது.

முக்கியபுள்ளிவிவரங்கள்:
• ஆண்மைசுரப்பி (பிராஸ்டேட்) புற்றுநோய் என்பதே உலகளவில் ஆண்களிடம் மிக அதிகமாக கண்டறியப்படும் புற்றுநோய்களுள் இரண்டாவது இடம் வகிக்கிறது.

• 15 ஆண்டுகள் முதல் 34 ஆண்டுகள் வயது பிரிவிலுள்ள இளம் நபர்களிடம் விரை புற்றுக்கட்டி என்பது அதிகம் கண்டறியப்படும் புற்றுநோயாக இருக்கிறது.

“நோ ஷேவ் நவம்பர்” மற்றும்“மொவம்பர்”இயக்கங்கள் ஏன் முக்கியத்துவமானவை..?

“நோ ஷேவ் நவம்பர்” மற்றும் “மொவம்பர்” என்ற பெயரிலான உலகளாவிய இயக்கங்கள், நவம்பர் மாதத்தின் போது ஆண்மைசுரப்பி (பிராஸ்டேட்) புற்றுநோய்,விரைபுற்றுக்கட்டி மற்றும் மலக்குடல் புற்றுநோய் மற்றும் மனநலம் உட்பட ஆண்களின் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நவம்பர் மாதத்தின்போது முகசவரம் செய்து கொள்ளாமல் தாடி, மீசையை வளர்க்க ஆண்களை ஊக்குவிக்கின்றன.

காவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட் – ல் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சுஜெய்சுசிகர், இதுகுறித்துபேசுகையில், “நோ ஷேவ் நவம்பர்” அல்லது “மொவம்பர்”என்ற இயக்க செயல்பாடுகளில் பங்கேற்பது, தீவிரமான உடல்நல பிரச்சனைகள் மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு வழிமுறை என்று வலியுறுத்தினார்.

வேடிக்கையானதாக இது தோன்றினாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறையாக “முகசவரம் செய்து கொள்ளாத நவம்பர்” என்ற இந்த எட்டு செயல்பாடு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சவரம்(ஷேவிங்) செய்து கொள்ளாமல் இருப்பதனால் இது குறித்த கேள்வியையும், விசாரணையையும் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஒரு உரையாடலையும் இதுbதொடங்கி வைக்கிறது. உரியகால அளவுகளில் உடல்நல பரிசோதனைகளை செய்து கொள்வது மற்றும் புற்றுநோய் உட்பட உடல்நல பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்க இது நம்மை ஏதுவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“தங்களது உடல்நலம் குறித்து ஆர்வமும், தன்முனைப்பும் கொண்டவர்களாக திகழ ஆண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். தவறாமல் உரியகால அளவுகளில் ஸ்கிரீனிங் சோதனைகளை செய்து கொள்ளுதல், சுயபரிசோதனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு மனம் திறந்து வெளிப்படையாக கலந்துரையாடுவது ஆகியவை ஒட்டுமொத்த நலவாழ்வை பராமரிப்பதில் இன்றியமையா படிநிலைகளாக இருக்கின்றன.

இதுகுறித்துகதிர்வீச்சுபுற்றுநோயியல்துறையின்இயக்குநர்டாக்டர். வைத்தீஸ்வரன்பேசுகையில், “உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது புற்றுநோய்க்கான சிகிச்சையின் வெற்றியை கணிசமாக அதிகரிக்கிறது. உரிய கால அளவுகளில், அதுவும் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு. செய்யப்படும் பரிசோதனைகள், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உடல்நல பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கின்றன” என்றுகுறிப்பிட்டார்.

“புற்றுநோய் பாகுபாடு காட்டுவதில்லை; அனைவரையும் பாதிக்கக்கூடிய திறன் கொண்டது இது.

எனவே தங்களது உடல்நலத்திற்கு ஆண்கள் முன்னுரிமை அளிப்பதும் மற்றும் நோய் பாதிப்பு வராமல் முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் இன்றியமையாதது,” என்கிறார் ஆழ்வார்பேட்டை ,காவேரி மருத்துவமனையின் மயக்கமருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். வேல்முருகன் தேசிங்.

ஆழ்வார்பேட்டை ,காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை கதிர்வீச்சு சிகிச்சையியல் இயக்குநர் டாக்டர். ஐயப்பன் பொன்னுசாமி பேசுகையில் “ஆரம்ப நிலையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதில் கதிர்வீச்சியல் மிக முக்கிய பங்காற்றுகிறது. குறித்த கால அளவுகளில் செய்யப்படும் மேமோகிராம்கள் மற்றும் சிடி ஸ்கேன்கள் போன்ற ஸ்கிரீனிங் சோதனைகள், புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள்வெளிப்படுவதற்குமுன்பே, அப்பிரச்சனைகளை அடையாளம் காண உதவுகின்றன”என்று கூறினார்.

“காது, மூக்கு, தொண்டைபிரிவின் அறுவை சிகிச்சை நிபுணரான நான், தாமதிக்கப்பட்ட நோயறிதல்களினால் ஏற்படும் கடும் பாதிப்புகளை அடிக்கடி நான் பார்க்கிறேன். முற்றிய நிலைகளில் புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுவதை தடுப்பதற்கு உரிய காலங்களில் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளும், புற்றுநோயின் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வும் அடிப்படை அம்சங்களாக இருக்கின்றன” என்கிறார் காது, மூக்கு, தொண்டைபிரிவின்அறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர். நீரஜ்ஜோஷி.

நோ ஷேவ் நவம்பர்” முன்னெடுப்பு திட்டம், புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஆண்களிடம் அதிகரிப்பதுடன் அவர்கள் உடல் நலத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்குமாறு அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் நம்புகிறது. இது குறித்து வெளிப்படையான உரையாடல்களை தொடங்கவும் மற்றும் நோய்வராமல் தடுக்கின்ற முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஊக்குவிப்பதன் வழியாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஒரு நல்ல பங்களிப்பை வழங்குவதே காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் – ன் நோக்கமாகும்.