August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி
June 15, 2018

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

By 0 1169 Views

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…

இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது

பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது.

கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கபினி அணையில் இருந்து நேற்று இரவு முதல் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது..!”