கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி தமிழக அரசு. டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது.
மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த்துடன் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இதன் விளைவாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை செய்துள்ளது தமிழக அரசு.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் இப்படி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
“முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு…” என்று பதிவிட்டுள்ளார்.
டாஸ்மாக் விஷயங்களுக்காக அவர் இப்படி பதியும் போது #தாங்குமாதமிழகம் என்ற ஹேஸ் டேககை பயன்படுத்துவது குறிப்பிட தக்கது.