April 28, 2024
  • April 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது
January 29, 2020

96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது

By 0 592 Views

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96′.

ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக 90’s மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் ஷர்வானந்த் நடிச்சிருக்கார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு’ கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிததிருந்தார்.

இப்படத்துக்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா தெலுங்கு ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.