வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாக்டர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் அரசியல், சினிமா, கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வந்திருந்து மண மக்களை வாழ்த்தினர்.
ஊடகங்களும் அந்தச் செய்தியை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சென்றன.
இந்நிலையில், ஐசரி கணேஷ் மற்றும் மணமக்கள் பிரீத்தா லஷ்வின் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது பேசிய ஐசரி கணேஷ், “எனது கல்விப் பணியாக இருக்கட்டும் விளையாட்டுப் பணியாக இருக்கட்டும், திரைப்பட விசயங்களாக இருக்கட்டும்… அனைத்திலும் ஊடகத்தினர் அனைவரும் உதவியாக இருக்கிறீர்கள்! இனியும் அப்படியே இருக்க வேண்டும்!
என் இல்ல திருமண நிகழ்வை, பட்டிதொட்டி எல்லாம் எடுத்துச் சென்றீர்கள். அனைவரும் அறியும்படி செய்ததற்கு நீங்கள்தான் காரணம்,
திருமணத்துக்கு வந்த முதலமைச்சர், முன்னாள் முதலைச்சர், ஆளுநர் கலைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி…” என்றார்.
தொடர்ந்து மணமக்களும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.