குட்டிப்புலி கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையா மீது கேகே நகரில் வசிக்கும் நூலகரான சக்திவேல் ஒரு புகார் கூறியிருக்கிறார். அது வருமாறு…
என் பெயர் சக்திவேல் கடந்த 30 வருடங்களாய் கே.கே நகரில் பொன்னம்பலம் சாலையில் நூல்நிலையம் வைத்துளேன் . கூடவே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன்.
கொம்பன் , குட்டிப்புலி டைரக்டர் முத்தையா நான் டீ குடிக்கும் கடையில் தினமும் வந்து டீ சாப்பிடுவார் . என்னிடம் வீடு வாங்கும் பொருட்டு அனுகினார்.
நானும் 2 வருடங்களாய் அவருக்கு வாடகை , லீஸ் மற்றும் விலைக்கு காட்டினேன் . கடந்த வருடம் கே.கே. நகர் ராமசாமி சாலை எண் பிளாட் No .885, K .K builders பிளாட் ஒன்றை காட்டி ரூ .82 இலட்சத்திற்கு முடிவு செய்து என் சொந்த செலவில் ரூ .10,000 கட்டி டாக்குமெண்ட்ஸ் வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் அதற்கு ரூ .2000 செலவு செய்து EC போட்டு கொடுத்தேன் .
தீபாவளிக்கு முன்பு ரெஜிஸ்டர் ஆகிவிட்டது . ரெஜிஸ்டரேஷனுக்கும் என்னை கூப்பிடவில்லை . எனக்கு தரவேண்டிய 2% சதவீதம் கமிஷன் தொகையும் கொடுக்காமல் இழுத்தடித்தும் கொண்டிருக்கிறார்.
மேலும் அவர் பேசிய தொகைக்கு குறைவாகவே முடித்துள்ளார் . இதனை நான் கேட்டதற்கு அரிவாள் பேசும் , போடா கூ… என்றும் அநாகரிகமற்ற வார்த்தைகளால் என்னை திட்டினார் .
இதனால் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்து உள்ளேன் . ஆதலால் என் கமிஷன் தொகையையும் நான் அட்வான்ஸ் கொடுத்த தொகையையும் வாங்கித்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.