July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அர்னால்டும் ஜாக்கி சானும் தமிழ் பேசி வரும் அயர்ன் மாஸ்க்
December 31, 2021

அர்னால்டும் ஜாக்கி சானும் தமிழ் பேசி வரும் அயர்ன் மாஸ்க்

By 0 456 Views

ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த “அயர்ன் மாஸ்க்” படம் வெளியீடு வலிமை’க்கு பிறகு வருகிறது!

சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த “அயர்ன் மாஸ்க்” ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது!

வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.!

டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை!

இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள்!

ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் “அயர்ன் மாஸ்க்” படத்தை தமிழில் வெளியிடுகிறது!