பிரபல நடிகை ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாகத்தான் அந்த நடிகை இப்படி தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார்.
இப்படிப் பேசியது நம் தமிழ் நடிகை இல்லை. அந்த வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பது மராட்டிய டிவி நடிகை ‘நேகா பெண்ட்ஸே’. அங்கு பிக் பாஸ் சீசன் 12 பிரபலமாம்.
இவர் கடந்த 5ம்தேதி ‘ஷர்துல் சிங் பயாஸ்’ என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் தொழிலதிபருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து அவை முறிவும் பெற்று விவாகரத்தான நிலையில் மூன்றாவதாகத்தான் நேகாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
Neha Pendse with Shardul Singh Bayas
இருவருக்கும் வயது வித்தியாசம் வேறு அதிகமாக இருப்பதால் நம் நோக்கர்களுக்குத் தாளவில்லை. ஆளாளுக்கு விமர்சனங்களை அள்ளிவிட, பொறுத்துப்பார்த்த நேகா இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அவர்களை தன் ஸ்டேட்மென்டால் ஓரம் கட்ட வேண்டும் என நினைத்து “என் கணவருக்கு விவாகரத்து ஆனதை குறையாக பேசுகிறார்கள். நானும் வெர்ஜின் இல்லையே..!” என்று அடித்து விட்டிருக்கிறார்.
அத்துடன் “பலர் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால், திருமணத்திற்கு முன்பே பலருக்கு இரண்டு மூன்று ரிலேஷன்ஷிப் இருந்திருப்பது சாதாரணமாகிவிட்டது..!” என்றும் பொளந்து கட்டியிருக்கிறார்.
நல்ல பொருத்தமான ஜோடி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல..?