April 19, 2025
  • April 19, 2025
Breaking News
April 27, 2018

ஹர்பஜன் சிங்கை பாரதியாக்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

By 0 1306 Views

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாட வந்தாலும் வந்தார். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

அவரைக் குறித்த மீம்ஸ்களும் எப்போதும் சமூக வலை தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் பெங்களூருவுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் போராடி கடைசி நேரத்தில் கேப்டன் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சிஎஸ்கே.

இது குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சு கட்றதா… யாரு திமிலை யாரு அடக்கப் பாக்குறது..? தோனி மூச்சு விடறதே இங்க உறுமல் சத்தம்தான். நீ நொறுக்கு பங்கு..!” என்று ட்வீட் செய்ய பற்றிக் கொண்டது பரபரப்பு.

ஹர்பஜனை பாரதியார் கெட்டப்பில் வரைந்து தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்..!