குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம்.
எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அப்படிப் பட்டவராக அமைய, படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு சென்னையில் நடந்தது.
பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் பேசப்பட்டவற்றிலிருந்து…
இயக்குநர் டான் சாண்டி –
“கொரில்லா டீசர் பார்த்துவிட்டு சிம்பஸியை வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு கடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மசாஜ் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்..!”
இசை அமைப்பாளர் சாம் சி எஸ் –
“நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு மிக புதுமையாக இருந்தது. இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்..!”
நடிகர் சதிஷ் –
“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அதுகூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்ஜாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி சொன்னதைச் செய்தாலே போதும். அவருக்கு காமெடி அப்படி வரும்..!”
நாயகன் ஜீவா –
“கொரில்லா படம் ஒரு வித்தியாசமான அனுபவம். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு – அதனால்தான். இந்தக் குரங்கு நல்ல ஃப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போதெ ரொம்ப என்ஜாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்ஜாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும்..!”
தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா,
“இந்தப்படத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பன்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்..!”
இந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பன்ஸி இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது