October 19, 2025
  • October 19, 2025
Breaking News
March 30, 2020

காயத்ரி ரகுராம் தொடங்கிய கொரோனா ஹெல்ப் லைன் சேவை

By 0 717 Views

வரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார்.

அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.

அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில் *90031 02250* என்ற நம்பரை பதிவிட்டு இதை காயத்ரி ரகுராம் ஹெல்ப்லைன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட் புரம், மகாலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களுக்கு உதவிய ஏதேனும் தேவைப்பட்டால் இந்த நம்பரில் அழைக்கலாம் என்று தெரிவித்திருக்கிரார்.

இந்த வசதி காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை இயக்கத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டும் இருக்கிறார் காயத்ரி ரகுராம்.

நல்ல சேவை…!