July 13, 2025
  • July 13, 2025
Breaking News
March 31, 2020

கோலிவுட் மௌனத்தை உடைத்த சிவகார்த்திகேயன்

By 0 742 Views

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா   இந்தியாவிலும் தன் ஆட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க எல்லா தொழில்களும் நசிந்து பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டது.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதற்கான சிகிச்சை விஷயங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட மத்திய அரசும் மாநில அரசும் பொருளாதார வசதியை மேம்படுத்த மக்களிடம் நிதி கோரி வருகின்றனர்.

பிரதமர் தனியாகவும் அந்தந்த மாநில முதல்வர்கள் தனியாகவும் நிதி திரட்டி வருகின்றனர்.

இதில் இந்தியாவிலேயே தெலுங்கு நடிகர்கள் முதலில் முன்வந்து பெரும் தொகையை பிரதமர் நிதிக்கும் ஆந்திர முதல்வர் நிதிக்கும் அளித்து இந்திய நடிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த னர்.

அதனைத் தொடர்ந்து இந்தி நடிகர்களும் நிதி அளிக்க முன்வந்தனர். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பலதுறை ஊழியர்களும் நிதி அளித்துக் கொண்டிருக்க இவர்களில் அதிகபட்ச தொகையாக இந்தி நடிகர் அக்ஷய்குமார் 25 கோடியை பிரதமர் நிதிக்கு அளித்து அத்தனை பேரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

ஆனால் இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக விளங்கும் கோலிவுட்டில் ஒரு ஹீரோ கூட இதுவரை நிதி பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

அந்த மௌனத்தை இப்போது சிவகார்த்திகேயன் உடைத்து முதல்வர் நிதிக்கு இருபத்தைந்து லட்சம் அளித்திருக்கிறார்.

இப்போதாவது மற்ற நடிகர்கள் நிதி அளிக்க முன்வருவார்களா இல்லை வழக்கம்போல் மௌனம் காப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்படியோ… நிதி அளிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்..!