April 25, 2024
  • April 25, 2024
Breaking News
January 31, 2022

பாஜக முடிவால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By 0 369 Views
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனித்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
 
அதேசமயம், அதிமுகவுடனான கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 
 
பாஜகவின் இந்த முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது…
 
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தது. எங்கள் இயக்கம் மிகப்பெரிய இயக்கம். கட்சியினரின் நலன், கட்சியின் நலன் ஆகியவற்றை பாதிக்காத வகையில்தான் இடப்பங்கீடு இருக்கும் என நான் கூறினேன். அந்த அடிப்படையில அவர்களின் எதிர்பார்ப்பை எங்களால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில், அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அது அந்த கட்சி எடுத்த முடிவு. அதற்கு எங்களின் கருத்து ஒன்றும் இல்லை..!”
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கூட்டணி தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி கேட்டதற்கு, “எதிர்காலத்தில் பாஜக எங்கள் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.!” என்றார் ஜெயக்குமார்.
 
“ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக எங்கள் கூட்டணயில் இருந்தது. சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இருந்தது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை. எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம். எதிர்வரும் காலத்தில் அது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி,  சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அவர்களின் விருப்பத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும்..!” என ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
பாஜக விலகியதால் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது, “பல தேர்தல்களில் அதிமுக தனித்து போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றிருப்பதாகவும், பாஜகவின் முடிவால் தங்களுக்கு பாதிப்பு இல்லை.!” என்றும் தெரிவித்தார்.