சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர் பேக்டரி’ சார்பில் சினிஸும் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்களாம்.
‘டிக்கிலோனா’ என்ற டைட்டிலை படக்குழு ‘டிக்’ அடித்த காரணம் படம் பார்க்கும் போது ரசிகர்களுக்குப் புரியும் என்கிறார் இயக்குநர். படத்தின் ஏனைய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் வெகுவிரைவில் வெளியாக இருக்கிறது.
‘தக தக’ கோடை விடுமுறையை ‘கல கல’ காமெடியால் குளிர்விக்கும் விதமாக படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
Dikkilona Title