April 23, 2024
  • April 23, 2024
Breaking News
March 8, 2020

தனுஷின் அடுத்த 10 படம் பற்றிய புதிய தகவல்கள்

By 0 659 Views

தனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கு வதும் அது கர்ணன் என்றும் எல்லோருக்கும் தெரியும்.

இந் நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம். 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி இசையமைப்பதும் தெரியும்.

44வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் தனுஷின் 45வது திரைப்படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளாராம். 46வது திரைப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படம் புதுப்பேட்டை 2ஆக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

தனுஷின் 47வது திரைப்படத்தை குட்டி படத்தை இயக்கிய மித்திரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 48வது திரைப்படம் பவர் பாண்டி இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  தனுஷ் 49 மனைவி இயக்கத்தில அமையலாம் என்றும், தனுஷின் 50வது திரைப்படம் வடசென்னை 2ஆக இருக்கலாம் என் றும் கூறப்படுகிறது.

இப்படி 10 புராஜெக்ட கையில் வைத்திருக்கும் வேறு இந் திய ஹீரோக்கள் உண்டா?