August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினியின் நடிப்புக்கு கைதட்டி மகிழ்ந்த தர்பார் படக்குழு
December 29, 2019

ரஜினியின் நடிப்புக்கு கைதட்டி மகிழ்ந்த தர்பார் படக்குழு

By 0 944 Views

நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பேட்டை படத்தில்தான் ரஜினிகாந்த் தன் வழக்கமான ஸ்டைலில் நடிப்பில் கலக்கியிருந்தார்.

அதற்குப் பின் இப்போது அவரது முழு ஸ்டைல் நடிப்பைக் கொண்டுவர தர்பார் படத்தில் முயற்சித்து இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.

படத்தில் பல இடங்களில் அவர் தன் பஞ்ச் டயலாக்குகளை பேசி வருகிறாராம். அப்படி அவர் தன் வழக்கமான மேனரிசங்கள், மற்றும் பஞ்ச் வசனங்களை பேசி  நடிக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படப்பிடிப்பில் இருந்த தர்பார் படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிததிருக்கிறது.

இது பற்றி ஏ ஆர் முருகதாஸ் கூறும்போது,

“என் தலைமுறை ஹீரோக்களுக்கு நான் ரசிகராக இருந்து பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் உடனே நான் வளர்ந்திருக்கிறேன். ஆனால், சிறு வயதிலிருந்தே ரஜினி சாரின் நடிப்பை பார்த்து அவரது ரசிகராகவே வளர்ந்திருக் கிறேன்.

அதனால் இப்போது நேரில் அவரது நடிப்பை பார்க்கும் போது என்னையும் அறியாமல் அந்த ரசிகன் வெளியே வந்து விடுகிறான். அப்படி தர்பார் படத்தில் அவர் கையை காலை ஆட்டி மேனரிசங்கள் செய்யும் போது என்னையும் அறியாமல் கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல என் படக்குழுவை சேர்ந்த அத்தனை பேரும்… அவர் காட்சியில் மேனரிசங்கள் செய்யும்போதோ அல்லது பஞ்ச் வசனங்களை பேசும்போது ஒட்டுமொத்த யூனிட்டும் கைதட்டி மகிழும்.

இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

ரஜினி சாரின் படங்களுக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ வில் எப்படி ரசிகர்களிடம் ஆர்ப்பரிப்பு இருக்குமோ அதைப் போலவே அவரது ஷூட்டிங்கில் நாங்கள் கைதட்டி மகிழ்ந்தது புதிய அனுபவமாக இருந்தது.

ஆக தர்பார் படத்தைப் பொறுத்தவரை அந்தப் படத்தை பார்த்த முதல் ரசிகர்கள் நாங்கள் தான்..!” என்றார்…