வீரபாண்டியபுரம் திரைப்பட விமர்சனம்
கூர்மன் திரைப்பட விமர்சனம்
அடுத்தவர் மனதை அறியும் வல்லமை படைத்த மெண்டலிஸ்ட் என்கிற பதத்துக்கு தமிழில் கூர்மன் என்ற பொருளைப் பிடித்து இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் அதுதான்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் ஒதுக்குப் புறமாக பெரிய பரப்பளவில் ஆதரவின்றி இருக்கும் பழைய வீட்டில் வசிக்கிறார் நாயகன் ராஜாஜி. அவருடன் இருப்பவர்கள் அவரது பணியாளரான பால சரவணனும், ஆசையாக வளர்க்கும் நாய் சுப்புவும்தான்.
போலீசில் ஆய்வாளராக இருந்த அவர் வாழ்வில் அவர் காதலிக்கு நடந்த கொடுமையின் காரணமாக வேலையை விட்டு…
Read Moreஎப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்
இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம்.
உலகை அச்சுறுத்தி வரும் ஐஸிஸ் அமைப்பு இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடத்தவிருக்கும் பேரழிவை இந்திய முஸ்லிம் ஒருவர் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்கிற கதை. அதைத்…
Read Moreகடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்
விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும்.
மகான் திரைப்பட விமர்சனம்
வழக்கமாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும். இந்தப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் அவருடன் நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது.
கொள்கையில்லாமல் இஷ்டப்படி வாழ்வது எப்படி குற்றமோ அதேபோல் கொள்கையுடன் நடக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர் நலன் கெட நடப்பதும் குற்றம் என்ற கருத்தை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகன் விக்ரமுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயரிட்டு வளர்க்க அவரோ சிறு…
Read Moreயாரோ படத்தின் விமர்சனம்
வழக்கமாக ஆவி கதைகள் எனப்படும் ஹாரர் வகைப் படங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பித்து கடைசியில் ஆவியில் வந்து முடியும். ஆனால் இந்தப்படத்தில் ஒரு ஹாரர் படம் போல ஆரம்பித்து கடைசியில் சஸ்பென்ஸ் திரில்லராக முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.
சாயம் திரைப்பட விமர்சனம்
கொஞ்ச காலமாகவே தமிழ் சினிமாவில் சாதிப்பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் தென் மாவட்டப் பகுதியில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது.
ஊர்ப் பெரிய மனிதரான பொன்வண்ணனும், ஆசிரியர் இளவரசுவும் நல்லது செய்து தங்கள் ஊரில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் மகன்களும் நல்ல நண்பர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பொன்வண்ணன் மகனாக அபி சரவணன் வருகிறார்.
பொன்வண்ணனின் உறவினரான தென்னவனும், அவர் தம்பி போஸ் வெங்கட்டும் கூட…
Read Moreமுதல் நீ முடிவும் நீ திரைப்பட விமர்சனம்
எந்த ஒரு மனிதனும் முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதேபோல் எந்த மனிதனின் முதல் காதலும் வெற்றி அடைந்ததாக பெரும்பாலும் காவியத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி பதிவுகள் அரிதாகவே இருக்கின்றன.
நாய் சேகர் திரைப்பட விமர்சனம்
சிலந்தி கடித்தால் ‘ஸ்பைடர் மேன்’ ஆக முடியும் என்றால், நாய் கடித்த சேகர் ‘நாய் சேகர்’ ஆக முடியாதா..? என்ற ‘கடி’தான் படத்தின் லைன்.
ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அவரது முயற்சிகள் சாத்தியமில்லை என்று அவரை விஞ்ஞான கமிட்டி விலக்கி வைக்கிறது. எனவே வீட்டில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்கிறார்.
ஜார்ஜின் அருகாமை வீட்டில் குடியிருக்கும் ஐடி ஊழியர் சதீஷை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் கடித்து விட,…
Read Moreஎன்ன சொல்லப் போகிறாய் திரைப்பட விமர்சனம்
சிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்)
அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான்.
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது என்றுதான்…
Read More